மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தனர். அதிலிருந்த அந்த அணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ரோகித் சர்மாவை நீக்கியதை சக வீரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சிலர், கேப்டனான ஹர்த்திக்கின் பேச்சைக் கேட்பதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடியது. இதில் இரண்டிலும் தோல்வியைத் தழுவிதால் அணி நிர்வாகமே அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக குஜராத் அணியுடனான போட்டியின் போது, கேப்டன் ஹர்த்திக், முன்னாள் கேப்டனான ரோகித்தை பீல்டிங்கில் அங்கும், இங்கும் அலையவிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதேபோல் அடுத்து, ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது தவறுதலாக பந்துவீச்சை தேர்வு செய்தது முதல் பீல்டிங்கிற்கு ஆட்களை நியமிப்பது வரை அனைத்திலும் ஹர்த்திக் தடுமாறியதால், அவரே முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் உதவி கேட்ட காட்சியும் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் ஹர்த்திக் பாண்டியா மீண்டும் ஒரு விஷயத்தில் சிக்கியுள்ள காட்சி இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. அதன்படி, நேற்று முன் தினம், போட்டி முடிந்தவுடன் மும்பை அணி தோல்வியைத் தழுவிய பிறகு இருதரப்பு வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மலிங்கா, ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றார். ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை கையால் தள்ளிவிட்டு அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றார். இதனால் அவமானப்பட்ட மலிங்கா, அதை பெரியதாக காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி டிரண்டாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!
தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!
அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!