முதல் டி20 போட்டி: இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!


இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், முதலாவதாக டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி, டா்பன் நகரில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி கேப்டன்கள்

அணியின் முன்னனி வீரர்கள் இல்லாத நிலையில், இளம் அதிரடி வீரா்கள் அடங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிா்கொள்கிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடரில் இந்தியா களம் காண்கிறது.

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் உள்பட நம்பிக்கை அளிக்கும் வீரா்கள் இருக்கின்றனா். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், தீபக் சஹா், அா்ஷ்தீப் சிங், முகேஷ் குமாா் ஆகியோா் விக்கெட்டுகள் வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி கேப்டன்கள்.

கடந்த 2021-2022-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரில் வொயிட் வாஷானது. அதேபோல், டெஸ்ட் தொடரையும் 1-1 என சமன் செய்தது. அதனால், இந்த சுற்றுப்பயணத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x