ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 277 ரன்கள்... சம்பவம் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும், மும்பை அணிக்கு 278 எனும் இமாலய இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 22ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி, இன்று இமாலய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், ஆரம்பம் முதல் அனைத்து பந்துகளையும் பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினார். 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்து 18 பந்துகளில் அரைசதம் அடித்து சன் ரைசர்ஸ் அணிக்காக புதிய சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 62 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் அதிரடி காட்டினார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

63 ரன்கள் எடுத்தபோது, அபிஷேக் சர்மா அவுட் ஆனார். அடுத்து மார்க்ரம், க்ளாசன் இருவரும் மும்பை பந்துவீச்சாளர்களை திணற வைத்தனர். அனைத்து பால்களையும் சிக்ஸர், பவுண்டரிகளுக்கு விரட்டினர். மார்க்ரம் 48 ரன்கள், க்ளாசன் 80 ரன்கள் என இருவரின் சூறாவளி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்களை எடுத்து சன் ரைசர்ஸ் அணி சாதனை படைத்தது.

அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்தது. மேலும், இந்த ஆட்டத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 ரன்களை எடுத்தும், முதல் 10 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்ததுள்ளது. 278 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் 8.2 ரன்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x