மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களான கிளைட் பட்ஸ் மற்றும் ஜோ சாலமன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் கயனா அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள் கிளைட் பட்ஸ் மற்றும் ஜோ சாலமன். இதில் பட்ஸ் நேற்று நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 66. சுழற்பந்து வீச்சாளரான இவர், வேகப்பந்து வீச்சாளர்கள் புகழ்பெற்று இருந்த காலத்தில் 4 ஆண்டுகள் மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடியவர், 7 சர்வதேச டெஸ்ட் மற்றும் 87 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதேபோல், கடந்த 2000-வது ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணியின் தலைமை தேர்வு குழு தலைவராகவும் இருந்தார்.
இந்த சோகம் அடங்குவதற்குள்ளாக அந்த அணியின் முன்னாள் வீரரான ஜோ சாலமன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93. 1958 மற்றும் 1965 ஆண்டுகளுக்கு இடையே அவர் மேற்கு இந்திய தீவுக்காக விளையாடினார். மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 1,326 ரன் குவித்துள்ளார். அதிலும், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற அந்த எதிரான டெஸ்ட் போட்டியை டிரா செய்தது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இவரது இறப்பு குறித்து இரங்கலை பதிவு செய்துள்ள மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் உயிரிழந்த இருவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...