அதிர்ச்சி... ரோகித் சர்மா மனைவியை கட்டிப் பிடித்த ஹர்திக்: வைரலாகும் வீடியோ!


ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகாவை கட்டிப் பிடிக்கும் ஹர்திக் பாண்டியா.

ஹோலி பண்டிகையை மகளுடன் கொண்டாடிக் கொண்டிருந்த ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகாவை ஹர்திக் பாண்டியா பின்னால் இருந்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஹோலி பண்டிகையை அகமதாபாத்தில் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை வாரி இறைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

2024 ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். நேற்று ஹோலி கொண்டாட்டத்தின போது ரோகித்தின் மனைவி ரித்திகா, தனது மகள் சமைராவுடன் வண்ணம் பூசி ஹோலி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஹர்திக் பாண்டியா,ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவை பின்னால் இருந்து கட்டிப் பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பதிலுக்கு ரித்திகாவும் ஹர்திக்கை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

x