ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இம்பேக்ட் பிளேயர் அபிஷேக் போரல் 10 பந்துகளில் 32 ரன்களை விளாசி அசத்தினார். மற்றபடி ஷாய் ஹோப் 33 ரன்களும், வார்னர் 29 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து பஞ்சாப் அணி 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினார். 3 ஓவர்களில் 34 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் சர்மா பவுலிங்கில் ஷிகர் தவான் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5வது பந்தில் பேர்ஸ்டோவும் 9 ரன்களில் ரன் அவுட்டானார். பின்னர் இம்பேக்ட் பிளேயராக பிரப்சிம்ரன் சிங் - சாம் கரன் கூட்டணி இணைந்து பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனவே சாம் கரன் - லிவிங்ஸ்டன் கூட்டணி சிறப்பாக ஆடியது. அதிரடியாக ஆடிய சாம் கரன் 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவையாக இருந்தது. பின்னர் 19வது ஓவரில் சாம் கரன் 47 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட்டாகினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரில் முதல் 2 பந்துகளும் ஒய்டுகளாக வீசப்பட்டது. பின்னர் லிவிங்ஸ்டன் அபார சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் கலில் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பல மாதங்களுக்குப் பின்னர் காயத்திலிருந்து மீண்டுவந்த ரிஷப் பண்ட் டெல்லி கேப்டனாக இந்த ஆட்டத்தில் முதன் முறையாக ஆடினார். ஆனால் இந்த முதல் போட்டியிலேயே தோல்வியடைந்துள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ளார். இப்போட்டியில் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே பண்ட் எடுத்திருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
‘சிங்கத்தின் கோட்டைக்குள்ள ஆடு சிக்கிடுச்சு... அண்ணாமலையை விமர்சிக்கும் கோவை அதிமுக!
வேறு வழி தெரியவில்லை... கடிதம் எழுதி விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!
அதிர்ச்சி... போலீஸ் தாக்கியதில் கால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு?
டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... அதிர வைத்த பிரபல தயாரிப்பாளர்!
களத்தில் இறங்குகிறார் எஸ்.பி.வேலுமணி... செம குஷியில் கோவை, நீலகிரி அதிமுக வேட்பாளர்கள்!