தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய அணி... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!


தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி

3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் வரும் ஞாயிற்றுக்கிழமை 10ம் தேதி டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று காலை டர்பன் நகர் சென்றடைந்தது. விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் சென்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி

ஜடேஜா, சூர்யகுமார் மற்றும் கில் தவிர்த்து அனுபவமுள்ள வீரர்கள் இன்றி முழுக்க இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது. விராட் கோலி, கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கே.எல்.ராகுல் தலைமையிலான அணி விளையாட உள்ளது.

ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட்

டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்ப பவுமா, வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

x