உங்களிடம்தான் எளிமையைக் கற்றுக் கொள்ள வேண்டும்!- கும்ப்ளேவின் ட்வீட்டால் நெகிழ்ந்துபோன பெண் விசிறி

பெங்களூரு - மும்பை விமானத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை சுட்டிக் காட்டி பெண் விசிறி ஒருவர் முன்னள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவின் எளிமையைக் கண்டு நெகிழ்ச்சி பொங்க ட்வீட் செய்திருக்கிறார்.
மும்பையில் இருந்து பெங்களூரு பயணித்த விமானத்தில் அனில் கும்ப்ளே இருந்துள்ளார். அதே விமானத்தில் அவரது விசிறியான அந்தப் பெண்ணும் இருந்திருக்கிறார்.
கும்ப்ளேவைப் பார்த்ததும் அவர் பரவசமாகியுள்ளார். உடனே தனது ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று, "அனில் கும்ப்ளே நான் பயணிக்கும் அதே மும்பை - பெங்களூரு விமானத்தில் தான் இருக்கிறார். அவரைப் பார்த்ததும் மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான அந்த விளையாட்டுதான் நினைவுக்கு வருகிறது. அவருக்கு தாடையில் பேண்டேஜ் இருந்தது. காயத்துடன் அவர் விளையாடினார்.
அவரை இப்போது பார்த்ததும். அருகே சென்று நன்றி கூறத் தோன்றுகிறது. அவர் பெற்றுத் தந்த வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், பயத்தில் என கால்கள் குளிர்ந்துபோய் கிடக்கின்றன" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் ட்வீட்டைப் பார்த்த கும்ப்ளே உடனே பதிலளித்தார், "விமானம் கிளம்பியவுடன் என்னிடம் வந்து தயக்கமின்றி ஹை சொல்லுங்கள்" எனப் பதிவிட்டார்.
Please feel free to come over and say hi after take off @Mittermaniac https://t.co/z2xdKF2wij
— Anil Kumble (@anilkumble1074) October 9, 2018
பின்னர் அனில் கும்ப்ளேவை சந்தித்து போடிங் பாஸில் அவரது கையெழுத்தைப் பெற்ற அந்தப் பெண் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, "இந்த போர்டிங் பாஸை ஃபிரேம் செய்து மாட்டுவேன். கும்ப்ளேவிடம்தான் எளிமையைக் கற்றுக் கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்தார்.