"தோனி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நான் யாருடைய இடத்தையும் நிரப்ப விரும்பவில்லை. என்னுடைய ஸ்டைலில் ஆட விரும்புகிறேன்" என்று சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் திடீரென அறிவிக்கப்பட்டார்.
போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானதால், தல தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அணியின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இன்றைய போட்டியின் தொடக்கத்தின்போது கேப்டன் தேர்வு குறித்தும், பல்வேறு சாதனைகளையும், அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த தோனியின் இடத்தை நிரப்ப முடியுமா என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்விடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறங்குவது பெருமையாக உள்ளது. தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதே நேரத்தில் நான் யாருடைய இடத்தையும் நிரப்ப விரும்பவில்லை. என்னுடைய ஸ்டைலில் ஆட விரும்புகிறேன். இதுகுறித்து கடந்தாண்டு ஐபிஎல் தொடரின்போது தோனி, கேப்டன் பொறுப்பை ஏற்க தாயாராக இரு என்று கூறினார். கேப்டனாக நியமித்தது குறித்து கடந்த வாரம் என்னிடம் கூறினர். இந்த தொடரை வெல்ல வேண்டும். அதுவே எனது விருப்பம்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...