[X] Close

டிக்கெட் கட்டணம் அதிரடிக் குறைப்பு- கூட்டமில்லாமல் ஈயாடும் இந்திய-மே.இ.தீவுகள் தொடர்


west-indies-test-match

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 11:38 am
  • அ+ அ-

மே.இ.தீவுகள் அணியில் நட்சத்திர பலம் இல்லை, சுனில் நரைன், கிறிஸ் கெய்ல், பிராவோ, பொலார்ட், ஆந்த்ரே ரஸல் போன்ற அதிரடி வீரர்கள் ஆல்ரவுண்டர்கள் இல்லாததால் அந்த அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டேடியத்தில் மக்கள் கூட்டம் இல்லை. ஈயடித்தது.

இதே நிலைதான் ஒருநாள் தொடருக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் அக்டோபர் 24-ம் தேதி வைசாகில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விலையை ஆந்திர கிரிக்கெட் வாரியம் குறைக்க முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே ஈயடிக்கும் இந்தத் தொடருக்கு இலவச டிக்கெட்டுகள் விவகாரத்தில் பிசிசிஐ-க்கும் மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்துக்கும் மோதல் ஏற்பட்டு போட்டி இந்தூரிலிருந்து வைசாகிற்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் போட்டிக்காக டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ரூ.6000-த்துக்கான டிக்கெட், ரூ.4000 ஆகவும், ரூ.3,500 டிக்கெட் ரூ.2500 ஆகவும் ரூ.2500 டிக்கெட் ரூ.2000 ஆகவும் மற்ற டிக்கெட்டுகளும் குறைக்கப்பட்டு ரூ.1800, ரூ.1200, ரூ.750, ரூ.500, ரூ.250 என்று கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

வைசாக் ஸ்டேடியத்தின் கொள்ளளவு 27,000 பேர் இதில் 24,000 இருக்கைகள் விற்பனைக்கும் 3000 இருக்கைகள் காம்ப்ளிமெண்டரியாகவும் கொடுக்கப்படும்.

இது போன்ற அர்த்தமற்ற தொடர்களை விடுத்து சுவாரசியமான தொடர்களை நல்ல இடைவெளி விட்டு ஆட வேண்டும் அப்போதுதான் சுவாரசியம் அதிகமாகும், 24 மணி நேரமும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தால் பொருளாதாரத்தில் கூறுவார்களே Law of diminishing returns, அப்படித்தான் இங்கும் ஏற்படும். டிக்கெட் விலையைக் குறைப்பதன் மூலம் அர்த்தமற்ற தொடர்களுக்கு மவுசு கூடிவிடாது என்று சில கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆதங்கப்படுவது சரிதான் என்று தோன்றுகிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close