நாகர்கோவில்: உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க உள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த உடற்பயிற்சியாளர் கண்ணனுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணிகட்டிபொட்டல் அருகே தாமரைக்குட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். உடற்பயிற்சியாளரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். சோழன் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் நடைபெறவுள்ள 2024-ம் ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.
இப்போட்டியில் கலந்து கொள்ள கலந்து கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாததால் தனக்கும், பயிற்சியாளருக்கும் உதவி செய்யுமாறு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் கண்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஸ்பெயினில் நடைபெறும் 2024-ம் ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொள்வதற்காக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடற்பயிற்சியாளர் கண்ணனுக்கு வழங்கினார்.