ஐபிஎல் போட்டியில் எப்படி செயல்பட போகிறோம் என சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், இதில், ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.
இதையடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்து வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய கம்மின்ஸ் ”சில திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, தொடக்கம் அதிரடியாக இருக்க வேண்டும். வீரர்களுடன் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. வீரர்களைப் புரிந்துகொள்ள அவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். பயிற்சியாளர்களுடன் உரையாடி வருகிறேன். அணி வீரராக என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை பேசினோம்.
எங்கள் அணி இளமை, அனுபவம் என நல்ல கலவையாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த புவனேஷ் இருக்கிறார். கடைசியாக கேப்டனாக இருந்த மார்கரம் இருக்கிறார். திறமையான இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அபிஷேக், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை பார்க்கும்போது ஆர்வமாக இருக்கிறது. ரசிகர்களும் போட்டிகளுக்கு முன்பாகவே உற்சாகமாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : ராம்தேவ்க்கு சம்மன்... நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!
ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்பனை: திமுக உடந்தை?! அதிருப்தியில் ரசிகர்கள்!
பாமகவுக்கு குடும்பமும், பணமுமே பிரதானம்... பொளந்து கட்டிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!
பாஜக பிரமுகர் கழுத்தை நெரித்துக் கொலை: தகாத உறவைக் கண்டித்ததால் மனைவி வெறிச்செயல்!
பாஜக கொடியுடன் வந்த சொகுசு கார்... தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!
ReplyReply allForwardAttendee panel closed