அதிக தூரம் சிக்ஸர் அடிக்க காரணம் இதுதான்... ரகசியம் சொல்லும் ரிங்கு சிங்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட ஐபிஎல் தொடரும், கடுமையானப் பயிற்சியும் உதவியதாக இந்திய அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறார் ரிங்கு சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 22* (14), 31* (9), 46 (29) ரன்கள் குவித்து அதிரடியில் மிரட்டினார் ரிங்கு சிங்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட ஐபிஎல் தொடரும், கடுமையானப் பயிற்சியும் உதவியதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது எனக்கு நம்பிக்கையளித்தது. நான் என்னை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். தினசரி உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று பளுதூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். அந்த உடற்பயிற்சி அதிக தொலைவுக்கு சிக்ஸர் அடிப்பதற்கான ஆற்றலை எனக்குத் தருகிறது என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


நெகிழ்ச்சி... இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!

x