டோமினிகா நாட்டின் ஸ்பிரிண்டரான லுகுலின் சாண்டோஸிடமிருந்து உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. தனது உண்மையான வயதை மறைத்த குற்றத்துக்காக தடகள விளையாட்டு ஒருமைப்பாடு பிரிவு அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
31 வயதாகும் சாண்டோஸ், 2012ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 400மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதையடுத்து தடகள விளையாட்டு ஒருமைப்பாடு பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "2012ஆம் ஆண்டில் வயது குழு சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது பாஸ்போர்ட்டில் பொய்யான பிறந்த தேதியை காட்டியிருப்பதை சாண்டோஸ் ஒப்புக்கொண்டுள்ளார் . 1992 இல் பிறந்த அவர், நவம்பர் 12, 1993இல் பிறந்ததாக காட்டியிருந்தார்.

இதன்மூலம் அவர் உலக ஜூனியர்ஸ் 2012இல் பங்கேற்க தகுதியற்றவராக இருந்துள்ளார். 2012 போட்டி விதிகளின் அடிப்படையில், போட்டி ஆண்டின் டிசம்பர் 31 அன்று ஜூனியர் விளையாட்டு வீரர்கள் 18 அல்லது 19 வயதுடையவராக இருக்க வேண்டும். வயதை மறைத்த குற்றத்தில் ஈடுபட்ட அவரது பதக்கம் பறிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது"

சாண்டோஸ் இரண்டு முறை யூத் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதுடன், 2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில் 400மீ போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...