ஐபிஎல் 2024 போட்டி... டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்!


சென்னையில் 22-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைன் மூலம் தொடங்குகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 22ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18-ம் தேதியான இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

C, D, E Lower பிரிவு தலா ஒரு டிக்கெட் ரூ. 1700-க்கும், I, J, K Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4,000-க்கும், I, J, K Lower பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4500-க்கும், C, D, E Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளதால் ஒரு மணி நேரத்திலேயே டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x