மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் - சாதித்துக் காட்டுவாரா?


தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில், நீண்ட நாட்களுக்குப் பின்னர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் விளையாட இடம்பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இதில் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது பாராட்டை பெற்றிருக்கிறது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என பலரும் விருப்பப்பட்ட ஒரு வீரர் சாம்சன். அவருக்கு அணியில் இடம் கிடைத்திருப்பதற்கு ஒரு காரணம் பயிற்சியாளர் டிராவிட் என கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன்

அவர் ஓப்பனிங் இறங்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருந்தாலும் அவருக்கு பதிலாக சாம்சன் அந்த பணியை மேற்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் சாம்சன் ஒருவருக்கு தான் இதுவரை எந்த இடத்தில் விளையாடுவது என்ற தீர்மானம் இல்லை. அடிக்கடி அணியில் இருந்து வெளியேற்றப்படுவதால் அவருக்கு நிலையான இடம் இந்திய அணியில் இல்லை.

அவ்வப்போது அணிக்குள் கொண்டுவரப்படுவதால் சாம்சனுக்கே கூட எந்த இடத்தில் விளையாடுவது என்ற குழப்பம் இருக்கிறது. மற்றவர்களுக்கு கொடுத்த வாய்ப்பு அளவுக்குகூட சாம்சனுக்கு இதுவரை கொடுக்கவில்லை. அதனால் கடும் அதிருப்தியில் இருந்த சஞ்சு சாம்சன் பொறுமையாகவே இருந்தார். தன்னுடைய அதிருப்தியை எங்கும் வெளிக்காட்டவில்லை. ஒவ்வொரு முறை வாய்ப்பு மறுக்கப்படும்போதும் இன்னும் கிரிக்கெட் பயிற்சிலேயே கவனம் செலுத்திய சாம்சன், இந்த முறை கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சன்

பெரும் போராட்டத்துக்குப்பிறகு அணிக்குள் இடம்பிடித்து வந்திருக்கும் சாம்சன், அவருக்கு போட்டியாக இருக்கும் இளம் வீரர்களைவிட நன்றாக ஆடி தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தன்னை எந்த இடத்தில் இந்திய அணி களமிறக்கினாலும் அந்த பொறுப்பை சரியாக செய்ய வேண்டிய கடமையில் சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவருக்கும் நன்றாக இது தெரியும் என்பதால் தென்னாப்பிரிக்கா தொடரை சாம்சனே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

x