ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் வரும் 18ம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஏப்ரல் 7ம் தேதி வரையில், 10 மைதானங்களில் 17 நாட்கள் நடைபெற உள்ளன. இந்த லீக்கின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எந்த அணியோடு மோதினாலும், அந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை அதிரி புதிரியாக இருக்கும். முக்கியமாக சென்னையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடினால், டிக்கெட் விற்பனை பற்றி சொல்லவே தேவையில்லை. சில ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் விலை நிர்ணயித்து டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், இந்த 2 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை, ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும், சேப்பாக்கம் மைதான கவுண்டர்களில் நேரடியாக விற்பனை செய்யப்படாது என்றும், டிக்கெட் விற்பனைக்கான தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையில் வரும் 22ம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டினை ஐபிஎல் இணையதளம் அல்லது BookMyShow தளங்களில் புக் செய்து கொள்ளலாம். பொதுவாக, டிக்கெட் விலை சில ஆயிரங்களில் இருந்து லட்சம் ரூபாய் வரை இருக்கும். ரசிகர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிக்கெட்களை புக் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!
செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!
குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!
பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!