அடுத்த தோனி நானா? - பதறிய இளம் வீரர் துருவ் ஜுரெல்!


துருவ் - தோனி

"இந்தியா அணிக்கு தோனி செய்த சாதனைகளைப் போல எந்த வீரராலும் செய்ய முடியாது. நான் எப்போதும் தோனி ஆக முடியாது" என்று இளம் வீரர் துருவ் ஜுரேல் புகழ்ந்துள்ளார்.

சமீபத்தில் முடிந்த இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ்கான், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேல், பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கினர்.

இதில், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான துருவ் ஜுரேல், இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். 15 முதல்தர போட்டிகளை மட்டுமே ஆடிய துருவ் ஜுரெல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், துருவ் ஜுரேல் தான் இந்தியாவின் அடுத்த தோனி என்று கிரிக்கெட் ஜாம்பவனான சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

கவாஸ்கர்

இந்த பாராட்டு குறித்து பேசிய துருவ் ஜுரெல், "தோனி போன்ற ஜாம்பவானுடன் என்னை ஒப்பிட்டு பாராட்டுவதற்கு நன்றி. ஆனால் தோனியை போல் சாதனைகளை என்னால் செய்ய முடியாது. இந்திய அணிக்காக தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதுபோல வேறு எந்த வீரராலும் செய்ய முடியாது. தோனிக்கு நிகர் அவர் மட்டுமே. என்னை பொறுத்தவரை எப்போதும் துருவ் ஜுரெல்லாகவே இருக்க விரும்புகிறேன். என்ன சாதனை செய்தாலும், எது செய்தாலும் துருவ் ஜுரெல்லாகவும் செய்ய விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

துருவ்

தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல்லின் வாட்ஸ்அப் டிபியில் கூட தோனி தான் இருக்கிறார். இதனை அவரே வெளிக்காட்டியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் துருவ் ஜுரெல் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு ராஜஸ்தான் அணிக்காக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி வந்த துருவ் ஜுரெல், இம்முறை நேரடியாகவே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x