இந்திய கிரிக்கெட் அணி தலைமைப் பயிற்சியாளர் பதவி: பிசிசிஐ கோரிக்கையை ஏற்பாரா ராகுல் டிராவிட்?


ரோகித் சர்மா, ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மேலும் 2 ஆண்டு காலம் பயிற்சியாளராக நீடிக்க ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை எட்டியது.

அதேபோல், டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாடியது. ஆசியக் கோப்பை தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களிலும் வெற்றி பெற்று சாதனைகளைப் படைத்துள்ளது.

ராகுல் டிராவிட், ரோகித் சர்மா

இந்நிலையில், அவரை மேலும் 2 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், இதுவரை டிராவிட் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படும்படி ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமாவது அவர் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை டிராவிட் ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ கோரிக்கைய அவர் ஏற்றால் 2025-ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டி வரை தலைமைப் பயிற்சியாளராக நிமியக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x