[X] Close

மேற்கு இந்திய அணி ரஞ்சி பிளேட் குரூப் ஆட்டத்துக்குக் கூட தகுதியற்றது: ஹர்பஜன் கலாய்


harbhajan-criticizes-west-indies

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 16:56 pm
  • அ+ அ-

கேப்டன் ஹோல்டர், வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச் காயமடைந்த நிலையில் இந்திய அணி மூவர் சதத்துடன் 649 ரன்கள் குவிக்க மே.இ.தீவுகள் 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பிசிசிஐ எப்போதும் செம உதை வாங்கும் அயல்நாட்டுத் தொடருக்குப் பிறகு சொத்தை தொடர் ஒன்றை ஏற்பாடு செய்து தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்குக்காகவும் அணியின் மதிப்பை உயர்த்துவதற்காகவும் செய்வது வழக்கம்தான்.

மே.இ.தீவுகளின் கிரிக்கெட்டை அழித்ததில் ஐசிசிக்கும் பங்கு உண்டு, ஐசிசி உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பங்கு உண்டு. ஐபிஎல்-க்கும் பங்கு உண்டு என்பதை அந்நாட்டு முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் நேற்று காட்டமாகக் கூறியதையும் பார்த்திருக்கிறோம், இந்நிலையில் கைகொடுத்துத் தூக்கி விட வேண்டிய மே.இ.தீவுகளை ஹர்பஜன் தன் ட்விட்டரில் கேலி செய்துள்ளார்.

“மே.இ.தீவுகள் கிரிக்கெட் மீதான உரிய மரியாதையுடன் தான் நான் உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வியை கேட்கிறேன்...இந்த மே.இ.தீவுகள் அணியை வைத்துக் கொண்டு ரஞ்சி டிராபி பிளேட் பிரிவிலிருந்து காலிறுதிக்கு இந்த அணி முன்னேற முடியுமா? ரஞ்சி மேல்மட்ட பிரிவில் வாய்ப்பேயில்லை.” என்று கிண்டல் செய்துள்ளார்.

அதாவது ரஞ்சி டிராபி எலைட் பிரிவு என்று அழைக்கப்படும் மேல்மட்ட அணிகள் பிரிவிற்குள் இந்த மே.இ.தீவுகள் அணி நுழைய முடியாது, சரி பிளேட் பிரிவிலிருந்து ஆடினாலும் அதிலும் காலிறுதிக்குத் தகுதி பெறுமா என்று மே.இ.தீவுகள் அணியை அவமானப்படுத்தியுள்ளார் ஹர்பஜன்.

ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்திடம் தோற்று விட்டு, அதன் திறன் வளர்ப்பு மேனேஜர் பாட் ஹோவர்ட், இதே போன்றுதான் வங்கதேச அணியில் பல வீரர்கள் ஆஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்டில் நுழையக் கூட முடியாது என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close