ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம்... வைரல் வீடியோ வெளியிட்டது அணி நிர்வாகம்!


பெங்களூர் அணி

ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 22-ஆம் தேதி முதல் நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை, மும்பை அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 16 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது. இதுவரை ஒருமுறைக்கூட கோப்பையை வெல்லாத நிலையில், மூன்று முறை மட்டும் இந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் கடந்த 7 வருடங்களாக இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது ஆர்சிபி அணி, இதனால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நடப்பாண்டில் ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்சிபி அணி சார்பில் நேற்று வெளியான வீடியோவில், ‘காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் அவர் அருகே மூன்று எருமை மாடுகள் புல்வெளியில் நிற்கின்றன. அந்த மாடுகளின் மீது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என தனித்தனியாக எழுதப்பட்ட சால்வைகள் போர்த்தப்பட்டுள்ளன. இதில் பெங்களூர் என எழுதப்பட்டு இருக்கும் மாட்டினை மட்டும் ரிஷப் ஷெட்டி விரட்டி விடுகிறார். பின்னர் ”அர்த்தம் புரிந்ததா?” என அவர் கேட்பதுடன் வீடியோ முடிகிறது.

இதன் மூலம் அணியில் உள்ள பெங்களூர் என்னும் வார்த்தையை நீக்கிவிட்டு ‘பெங்களூரு’ என மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. பெயர் மாற்ற எதிரொலியால் இந்தாண்டு பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என அதன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

x