3வது டி20 கிரிக்கெட் போட்டி... ஆஸ்திரேலியா பந்துவீச்சு! தொடரை கைப்பற்றுமா இந்தியா?


சூர்யகுமார் யாதவ், மேத்யூப் வேட்

இந்தியாவிற்கு 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தியில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதனால், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பயமின்றி விளையாடி ஆஸ்திரேலிய வீரர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது. அதேபோல், ஆஸ்திரேலிய அணியிலும் அனுபவ வீரர்கள் இன்றி புதிய வீரர்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x