உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இதற்காக 10 அணிகளும் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி மாலை அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இதில், மும்பை இண்டியன்ஸ் அணி பும்ராவை தக்கவைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தது. அதேநேரம், ஐபிஎல் அணிகளிடம் இருந்து டிரேடிங் முறையில் நேரடியாக வீரர்களை வாங்கிக் கொள்ளும் முறை டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவை அந்த அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் மும்பை இண்டியன்ஸ் அணி நேற்று வாங்கியது. இந்த நிலையில், பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு பதிவுகளை ஸ்டோரியாக வைத்துள்ளார். அதில் முதல் ஸ்டோரியில் நாம் விசுவாசமாக இருப்பதற்கு பதில் பேராசையுடன் இருப்பதே நல்லதாக அமைந்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ஸ்டோரியில், “சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை அணியிலிருந்து வேறு அணிக்கு அவர் டிரேடிங் செய்யப்படவுள்ளார். அதனையே தனது ஆதங்கமாக தெரிவித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், மும்பை இண்டியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களை பும்ரா பின்தொடர்வதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த செய்தி குறித்து பும்ரா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை முக்கிய காரணமாக அமைந்துள்ள பும்ரா, அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!
கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!
ராணுவவீரர் மீது கொலைவெறி தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
ஐஐடி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்!