ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் அதற்காக பயிற்சியில் ஈடுபட்ட இஷான் கிஷன் பேட்டிங்கில் தடுமாறும் வீடியோ வெளியாகி உள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இதனால் அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன், இஷான் கிஷனுக்கு பந்து வீசினார். அப்போது, அர்ஜூன் வீசிய பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடப்பாண்டில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு, மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!
மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!
சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?
திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!