ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேங்காய் உடைத்து, விளக்கேற்றி ஹர்திக் தலைமையிலான மும்பை அணி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7ம் தேதி வரையில் 10 மைதானங்களில் 17 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைப் போல மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை அணியின் கேப்டனாக இருந்து ஐந்து முறை கோப்பையை பெற்று தந்த ரோகித் ஷர்மா இந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது. ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இரண்டு வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஒருமுறை கோப்பையையும், ஒருமுறை பைனல் போட்டிக்கு தனது அணியையும் அழைத்துச் சென்றார். தனது திறமையான கேப்டன்சி மூலம் அனைவரையும் கவர்ந்த ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணி ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடி வந்தது. பிளே ஆப்களுக்கு கூட தகுதி பெற முடியாமல் தடுமாறியது, இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் 2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் தனது அணியில் இருந்த முக்கிய வீரர்கள் தவறவிட்டது. இதனால் இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோகித் ஷர்மா விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரஸிங் ரூமிற்கு வருவதும், அங்கு சாமி படங்களை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து, விளக்கேற்றி பூஜை செய்து தங்களது ஐபிஎல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ரமலான் நோன்பு... முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரத்தில் திடீர் மாற்றம்!
சமயபுரம் கோயிலில் தீ விபத்து... பூசாரிகளுக்கு தீக்காயம்; பக்தர்கள் அதிர்ச்சி!
காளிக்கு நள்ளிரவில் காளி பூஜை... பண்ணை வீட்டில் மண்டை ஓடுகளால் பரபரப்பு!
குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிய கும்பல்... பரபர சிசிடிவி காட்சிகள்!
இயக்குநர், நடிகர் சூரியகிரண் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி