இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தது பிசிசிஐ... ஊதியம் இவ்வளவா?


டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில், டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான ஊக்கத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வென்றுள்ளது. மகத்தான வெற்றியை இந்தியா பெற்ற நிலையில், வீரர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

புதிய அறிவிப்பின் படி, ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டி நடக்கிறது என்றால், 50 சதவிகித போட்டிக்கும் குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படாது. அதாவது 9 டெஸ்ட் போட்டியில் 4 போட்டிக்கோ அல்லது அதற்கு குறைவாகவோ விளையாடினால் ஊக்கத்தொகை அளிக்கப்படாது. ஒருவேளை 50 சதவிகித டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக விளையாடினால், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.30 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

அதாவது 5 அல்லது 6 போட்டிகளில் விளையாடினால் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் மட்டுமே வழங்கப்படும். பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அவருக்கு ரூ.15 லட்சம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும்.

அதேபோல் ஒரு சீசனில் 75 சதவிகித டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடினால், ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியமாக ரூ.45 லட்சம் வழங்கப்படும். பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றால் ரூ.22.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

இது 2022-23 சீசன் முதலே நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் ரஹானே, புஜாரா உள்ளிட்ட வீரர்களும் பயனடைவார்கள். அதேபோல் இந்த திட்டத்தால் இளம் வீரர்கள் பலரும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள். பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் சேர்த்து ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதன் மூலம் வரும் நாட்களில் ஐபிஎல் ஒப்பந்தம் இல்லையென்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் சூழல் இருக்காது. ஏனென்றால் இந்திய அணி ஒரு சீசனில் குறைந்தபட்சம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

x