இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. 4 போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த 7ம் தேதி தரம்சாலா மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா மற்றும் கில் சதம் அடித்தும், ஜெய்ஸ்வால், படிக்கல், சர்ஃப்ராஸ் ஆகியோர் அரை சதம் அடித்தும் அசத்தினர்.
இதனால் இந்திய அணி முதலில் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்தது. 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி துவக்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து வெளியேறினர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பெயர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. தசைபிடிப்பு காரணமாக 3வது நாளில் ரோகித் சர்மா விலகிய நிலையில், பும்ரா இந்திய அணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்தார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்சர்களை கடந்த முதல் டெஸ்ட் தொடர் என்ற சாதனையை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 72 சிக்சர்களும், இங்கிலாந்து வீரர்கள் 28 சிக்சர்களும் அடித்துள்ளனர். அதிகபட்சமாக இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 26 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நேருவின் சாதனையை சமன் செய்வாரா... நீண்டகால பிரதமர்கள் வரிசையில் முன்னேறும் மோடி!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அஜித்... 'தல' ரசிகர்கள் உற்சாகம்!
‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!
படிக்கும் வயதில் காதல்... பாதியில் முடிந்த வாழ்க்கை... 10-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை!
பிரதமர் மோடி யானை சவாரி... அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்!