தோனி கேப்டனாக இருந்தால் பலமில்லாத அணியும் ஜெயிக்கும்... மொயின் அலி புகழாரம்!


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனியை சக கிரிக்கெட் வீரர் மொயின் அலி புகழ்ந்து பேசியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 16 ஆண்டு கால ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையும், மும்பை இண்டியன்ஸ் அணி 5 முறையும் கோப்பையை வென்றுள்ளது. மற்ற அணிகள் தலா ஓரிரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், லக்னோ ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கின்றன. ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அணியின் வெற்றியை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்படும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர்,”தோனி ஒரு சிறப்பான வீரர் மட்டுமின்றி சிறப்பான கேப்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிகவும் நல்லவர். சிஎஸ்கே கேப்டனாக தோனி இருந்து அந்த அணிக்காக நீங்கள் விளையாடும்போது அணி பலமானதோ அல்லது பலவீனமானதோ ஆனால், அந்த அணி வெல்தற்கான வாய்ப்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மொயின் அலி தோனியை பாராட்டிப் பேசியதைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள், அவரை கொண்டாடுவது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சைப் பரப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

x