இன்று தொடங்கிய 5 வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை ஏற்கெனவே வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. அதில் ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல்நாள் முடிவில் 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் பல சாதனைகளை பதிவு செய்துள்ளார்:
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார். அவர் தற்போது வரை 712 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (655) மற்றும் ராகுல் டிராவிட் (602) ஆகியோர் உள்ளனர்.
குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் 2வது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தில் வினோத் காம்ப்ளியும் (14 இன்னிங்ஸ்), 2வது இடத்தில் ஜெய்ஸ்வால் (16 இன்னிங்ஸ்), 3வது இடத்தில் புஜாராவும் (18 இன்னிங்ஸ்) உள்ளனர்.
ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் ஓர் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார். அவர் 9 இன்னிங்ஸில் 26* சிக்ஸர்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் சச்சின் உள்ளார். அவர் 25 சிக்ஸர்கள் (74 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 22 சிக்ஸர்களுடன் (20 இன்னிங்ஸ்) 3வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் மிக இளவயதில் ஆயிரம் ரன்களை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் தன்னை இணைத்துக் கொண்டார். அவர், 22 வயது 70 நாட்களில் இந்த ரன்களை எடுத்து 4வது இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் சச்சின் (19 வயது, 217 நாட்கள்), கபில் தேவ் (21 வயது, 27 நாட்கள்), ரவி சாஸ்திரி (21 வயது, 197 நாட்கள்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!
ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!
அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!