[X] Close

800 முறை ஆட்டமிழக்கச் செய்த தோனி: சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடிப்பாரா?


dhoni-at-800-dismissals

கோப்புப் படம்: ஏபி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 29 Sep, 2018 15:45 pm
  • அ+ அ-

இந்தியாவின் மகேந்திர சிங் தோனி ஒரு விக்கெட்கீப்பராக, 800 முறை பேட்ஸ்மென்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆசிய விக்கெட் கீப்பர்களில் தோனியே இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். சர்வதேச அளவில் 3-ஆம் இடத்தில் உள்ளார். 

வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், லிடன் தாஸ், மொர்டாசா என இருவரும் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கினால் ஆட்டமிழந்தனர். இதில் மொர்டாசாவின் விக்கெட், தோனிக்கு கிடைத்த 800-வது விக்கெட். இந்த 800ல், தோனி செய்த ஸ்டம்பிங் மட்டும் 184. அதிக ஸ்டம்பிங் என்ற கணக்கை எடுத்துப் பார்த்தால் தோனியே முதலிடத்தில் இருக்கிறார்.

அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் முதலிடத்திலும் (998 முறை), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் இரண்டாம் இடத்திலும் (905) உள்ளனர். தோனி முதலிடத்தைப் பிடிக்கத் தேவையான எண்ணிக்கை 199. இதை தோனி தொடுவாரா அல்லது அதற்கு முன்னரே ஓய்வறிவித்துவிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பவுச்சர், கில்கிறிஸ்ட் என இருவருமே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், தோனி இன்னும் சில ஆண்டுக ஒருநாள் போட்டிகளில் ஆடி வந்தால் கண்டிப்பாக முதலிடத்தைப் பிடிப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close