[X] Close

மீண்டும் ஸ்ட்ம்பிங்கில் அசத்திய தோனி: 0.16 செகண்டில் அவுட்


dhoni-s-stumping

ஸ்டம்பிங் செய்யும் தோனி | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 14:50 pm
  • அ+ அ-

டிஆர்எஸ் முறை, தோனியின் துல்லியமான கணிப்பால எப்படி தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று ஆனதோ, அதே போல தோனியின் ஸ்டம்பிங்குக்கும் தனி அங்கீகாரம் உள்ளது.

பந்தை அடிக்காமல் விட்டுவிடும் பேட்ஸ்மென், பின்னால் தோனி கீப்பிங் செய்து கொண்டிருந்தால் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கால் இன்ச் காலை நகர்த்தினாலும் ஸ்டம்பை தாக்கி ஆட்டமிழக்கச் செய்துவிடுவார் தோனி.

அப்படி, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தோனி செய்த ஸ்டம்பிங் ஒன்று பலரால் பாராட்டப்பட்டது. வங்கதேசத்துக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், சதத்தைக் கடந்து ஆடி வந்த லிடன் தாஸ் குல்தீப் யாதவ் வீசிய 41-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ளும்போது, வைடாக வந்த பந்தை அடிக்க முயற்சித்தார்.

ஆனால் பந்து ஸ்பின் ஆகாமல் பேட்டைத் தாண்டி தோனியிடம் சென்றது. அவர் புயல் வேகத்தில் ஸ்டம்பை தகர்க்க, மூன்றாவது நடுவரிடம் ஸ்டம்பிங் அப்பீல் சென்றது. லிடன் தாஸ் காலுக்கும், க்ரீஸ் கோடுக்கும் இடையே மிக நுண்ணிய அளவு வித்தியாசமே இருந்தது. மூன்றவது நடுவர் பல முறை ரீப்ளை பார்த்து, நேரம் எடுத்த பின்னரே அவுட் என அறிவித்தார். லிடன் தாஸ் களத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக வங்கதேசத்தின் ஸ்கோர் 250ஐ தாண்டியிருக்கும். ஆனால் யாதவ்வின் சுழல், தோனியின் திறமை இரண்டும் சேர்ந்து அவரை ஆட்டமிழக்கச் செய்தது.

இந்த ஸ்டம்பிங்குக்கு தோனி எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 0.16 விநாடிகள் மட்டுமே.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close