இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீட்டுக்கு வரும் உணர்வு... ஹர்திக் பாண்ட்யா உருக்கம்!


ஹர்திக் பாண்ட்யா

மும்பை அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாய் வீட்டுக்கு வருவது போல் உள்ளது என ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குஜராத் அணி டைட்டில் வென்ற போது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. மார்ச் மாதம் இறுதி தொடங்கி, மே மாதம் இறுதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

ரோகித், ஹர்திக்

இந்த நிலையில், 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டனை மாற்றி அறிவித்துள்ளது அந்த அணி நிர்வாகம். அதாவது 5 கோப்பைகளை பெற்றுக்கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதில், ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மும்பை இண்டியன்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கேப்டன் விவகாரத்தில் இதுவரை எந்த மாற்றமும் நடைபெறவில்லை. ஆனால், தன்னை கேப்டனாக அறிவித்த முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றுகொடுக்க போராட்டுவேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “மும்பை அணிக்காக விளையாட வருவது இரண்ரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாய் வீட்டுக்கு வருவது போல் உள்ளது. ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவுக்காக நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x