சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா 3-வது வெற்றி!


செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

செக் குடியரசு நாட்டில் நடந்து வரும் சர்வதேச செஸ் போட்டியில் இந்திய செஸ் விளையாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 3-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

செக்குடியரசு நாட்டில் பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுவார்கள். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார். இதன் மூலம் பிரக்ஞானந்தா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தார். அடுத்தடுத்த போட்டிகளில் பங்கு பெற்ற இந்தியாவின் டி. குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினர்.

நோடிர்பெக் அப்துசத்தரோவ்

6 சுற்றுகள் முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரிச்சர்ட் ராப்போர்ட் (ஹங்கேரி), பர்ஹாம் மக்சூட்லூ (ஈரான்), பிரக்ஞானந்தா தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... பலாத்காரத்திற்குள்ளான ஸ்பெயின் பெண் பேட்டி !

x