ரஞ்சிக் கோப்பை அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி 70 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதையடுத்து அரையிறுதி போட்டியில் மும்பை அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது. நேற்று இந்த போட்டி மும்பையில் துவங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணியில், சாய் சுதர்சன் ரன் எதுவும் எடுக்காமலும், நாராயண் 4 ரன்களிலும், பிரதோஷ் 8 ரன்களிலும், சாய் கிஷோர் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
விஜய் சங்கர் 44 ரங்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டும் எடுத்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது. முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூர் அசத்தலான சதம் அடித்து விளாசினார். தனுஷ்கோடியன் 81 ரன்கள், முஷீர்கான் 55 ரன்களும் எடுத்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்திருந்தது.
232 ரன்கள் பின் தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இதிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். பாபா இந்திரஜித் மட்டும் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை அணி தரப்பில் முதல் இன்னிங்ஸில் துஷார் தேஷ் பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மும்பை அணியின் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணியின் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!
கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!
இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!
சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!
பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!