உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன் இலக்கு நிர்ணயித்த இந்தியா!


இந்தியா - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 241 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். சுப்மன் கில் 4 ரன்னுக்கு, ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், 47 ரன் எடுத்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் நிதானமாக ஆடினர். ஆனால், அணிக்கான ரன் ரேட் உயரவில்லை.

விராட் கோலி 54 ரன்னும், கே.எல்.ராகுல் 66 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் 240 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 241 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.

இந்திய அணி இதுவரை பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இன்றைய போட்டியில் அதே ஃபார்முடன் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

x