ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 72வது அரைசதம்: விராட் கோலி புதிய சாதனை!


விராட் கோலி

கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீசி வருகிறது.

ரோகித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்னை உயர்த்தினர். இந்தப் போட்டியில் விராட் கோலி 25.1 ஓவரில் தனது 72வது அரைசதத்தினை அடித்து அசத்தினார்.

ஆனால், அடுத்த மூன்றே ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆட்டமிழந்தது பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், உலகக் கோப்பையில் தொடரில் தொடர்ந்து 5 முறை 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை செய்திருக்கிறார். 2019-ல் விராட் கோலியும் இந்த சாதனையை ஏற்கெனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x