'நாங்க வின் பண்றோம், கப்பைத் தூக்குறோம்': தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வீடியோ வைரல்!


ஜடேஜா, ஸ்ரீகாந்த்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துடன் ரவீந்திர ஜடேஜா தமிழில் பேசி அசத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 45 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவும், 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவும் மோதுகின்றன.

ஏற்கெனவே இதே உலகக் கோப்பை போட்டியில் 2003-ம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனானது. அதற்கு இந்தியா பழித்தீர்க்குமா என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கேவின் செல்லப் பிள்ளையுமான ரவீந்திர ஜடேஜவுக்கு முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதில் ஜடேஜா, " நாளைக்கு நாங்க வின் பண்றோம், கப்பைத் தூக்குறோம், அடி அடினு அடிக்கிறோம்" என்ற தமிழ் வார்த்தைகள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் ரசிகர்கள் அதனைக் காண ஆவலாக காத்திருக்கின்றனர்.

x