உலகக் கோப்பை இறுதிப்போட்டி… வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் ரோகித், கம்மின்ஸ்!


ரோகித், கம்மின்ஸ் போட்டோ ஷூட்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேத்திற்கு குறைவாகவே உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று நம்பர் 1 அணியாக விளங்கும் இந்திய அணி, தனது 3வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணி தனது 6வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் திட்டத்துடன் களமிறங்க உள்ளது.

ரோகித், கம்மின்ஸ் போட்டோ ஷூட்

இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் கூலாக போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டுள்ளனர். குஜராத் தலைநகர் காந்திநகருக்கு அருகே பதான் நகரத்தில் உள்ள அடாலஜ் படிக்கிணறில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை மையமாக இருக்க ரோகித், கம்மின்ஸ் ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x