நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தான் கைப்பற்றும் என ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். அதற்காக அவர்கள் செய்து வரும் டீகோடிங் அட ஆமாம் இல்ல என பலரையும் யோசிக்க வைத்துள்ளது. அதிலும் கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கும், 2023ம் ஆண்டு இந்திய அணிக்கும் உள்ள ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் பல இருக்கின்றன அவை என்ன என்பதை பார்ப்போம்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று, 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கும், 2023ம் ஆண்டு நடந்து வரும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் 2003 உலகக்கோப்பையில் இந்தியா தொடர்ந்து 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த உலகக் கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் கில்லஸ்பி தான் முதல் 4 போட்டிகளில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக கில்லஸ்பி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஆன்டி பிக்கல் களமிறங்கி முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தான் 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டார். அதன்பின் முகமது ஷமி களமிறங்கி என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். 3 முறை 5 விக்கெட்டுகள், அரையிறுதியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் 2003 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதேபோல் நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் 2003ம் ஆண்டு 3வது முறையாக ஆஸ்திரேலியா அணி உலக் கோப்பையை வென்றது. தற்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால், இந்தியாவுக்கும் இது 3வது உலகக்கோப்பையாகும். இந்த இரு உலகக் கோப்பைகளுக்கு இடையிலும், இரு அணிகளுக்கும் இடையில் இத்தனை ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இடத்தில் இந்தியாவும், இந்திய அணி இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. இதனால் இம்முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!