உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியைப் தான் பார்க்கப் போவதில்லை என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் வரும் 19ம் தேதி அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இந்தியாவிற்கு அடுத்ததாக, அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் இடம்பிடித்தது. இதனால், அந்த அணி அரையிறுதியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் வழக்கமான நாக் அவுட் தோல்வி, இம்முறையும் விடாமல் துரத்தியது. ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்ற தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் போனது.
இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாதபோதிலும் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் அணியை வழிநடத்திய விதம் நம்பமுடியாததாக இருந்தது. சிறிய ஸ்கோரை எடுத்தப் பிறகு அதற்கு ஏற்றவாறு அவர் அணியை அழுத்தமான சூழலில் சிறப்பாக வழிநடத்தினார். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்'' என்றார்.
அப்போது, செய்தியாளர்கள் இந்த உலகக் கோப்பை தொடரை யார் வெல்வார்கள், என அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``இறுதிப்போட்டியை தான் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் மட்டுமே இருப்பதாக கூறினார். உண்மையில், நான் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கப் போவதில்லை. மேலும், இறுதிப்போட்டி குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் கூறினார். அதே நேரம், சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும்'' என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!