[X] Close

696 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேப்டனாக தோனி: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி


dhoni-standin-captain

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Sep, 2018 17:12 pm
  • அ+ அ-

கிட்டத்தட்ட 696 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குகிறார். 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கனவே இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர் 4 சுற்று ஆட்டத்துக்கான முக்கியத்துவம் சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு, ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பெற்று, ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெறாத வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்றார். அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாட, கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோஹித் சர்மா ஆசியகோப்பை தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி, இளம் வீரர்கள் களம் காண நல்ல வாய்ப்பு என்பதால் தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் கவுல், கலீல் அஹமத், மனிஷ் பாண்டே உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வெடுத்துக்கொண்டதால், அவருக்குப் பதிலாக தோனி இந்த ஆட்டத்துக்கு மட்டும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார். டாஸ் போட தோனி களத்துக்கு வந்ததைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தோனி கேப்டனாக இந்தியாவுக்கு விளையாடும் 200வது ஒருநாள் போட்டி இது. மேலும், இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடியவர்கள் பட்டியலில், ராகுல் டிராவிட்டை முந்தி இரண்டாம் இடத்தை தோனி பிடித்துள்ளார். முதலிடத்தில் சச்சின் 664 போட்டிகளிலும், தோனி இரண்டாவது இடத்தில் 505 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். 

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய தீபக் சாஹர், இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close