தோல்வியால் ஏற்பட்ட வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: தென்னாப்பிரிக்க கேப்டன் வேதனை!


இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்த பல வாய்ப்புகள் வந்தும் அதனை நாங்கள் தவறவிட்டோம் என தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வழக்கம் போல பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதுவே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இதுபோன்று பந்து வீச்சிலும் ஆறு ஓவரில் 60 ரன்களை எடுக்க விட்டது. இது அந்த அணிக்கு பெரிய சரிவைக் கொடுத்தது.

அவுட் செய்யும் ஆஸ்திரேலியா வீரரால் கவலையடைந்த பவுமா.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா கூறுகையில், ‘’ இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பைனலில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும்.

இன்றைய ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டியில் எங்களுடைய திறமையை மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றை நாங்கள் வெளிப்படுத்தினோம். தோல்வியை நாங்கள் சீக்கிரமாக ஒப்புக்கொள்ளவில்லை. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அந்த இடத்தில் தான் நாங்கள் தோல்வியைக் கண்டோம்.

ஆஸ்திரேலியா, தென்னப்பிரிக்க அணிகள்

இது போன்ற நெருக்கடியில் இப்படி விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 70 ரன் மேல் அடித்து விட்டார்கள். அதன் மூலம் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு எளிதாகி விட்டது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் மார்க்கரம் மற்றும் மகாராஜா ஆகியோர் ஆஸிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுக்கு சில கடின வாய்ப்புகள் வந்தது. அதை நாங்கள் கோட்டை விட்டோம்’’ என்றார்.

x