கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு பிறகு விராட் கோலி தான் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வேறொரு வீரரின் பெயரை கூறியிருக்கிறார்.
ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் முதல் முறையாக 700 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு சேர்ந்துள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின் தான் அதன் கடவுள் என்று ரசிகர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. இன்றுவரை கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றுதான் ரசிகர்கள் பாராட்டி வருவார்கள்.
ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கிரிக்கெட்டின் கடவுள் இனி வேறொரு வீரர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். சச்சினுக்கு பிறகு விராட் கோலி தான் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் .ஆனால் மைக்கேல் வாகன் விராட் கோலியை அந்த லிஸ்டில் சேர்க்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், “ சச்சினிடமிருந்து கிரிக்கெட் பாரம்பரியம், புகழ் ஆகியவற்றை விராட் கோலி பெற்றுக்கொண்டார். எனக்கென்னவோ விராட் கோலியிடமிருந்து அந்த புகழ் பாரம்பரியம் அனைத்தும் சுப்மன் கில்லுக்கு செல்லும் என தோன்றுகிறது. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கடவுளாக கில் தான் வருவார் என்று தோன்றுகிறது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் கோலியை போல் அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்துதான் சீனியர் அணிக்கு கில் திரும்பி இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் 2000 சர்வதேச ரன்களை கில் அடித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 101 என்ற அளவில் இருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் கில்லுக்கு தான் உள்ளது.
தற்போது வரை கில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏழு சதம், ஒன்பது அரைசதம் அடித்திருக்கிறார். இதேபோன்று நடப்பாண்டில் மட்டும் கில் ஒரு இரட்டை சதம் உட்பட ஐந்து சதம் அடித்து 2023ம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி எவ்வாறு சச்சின் ரெக்கார்டை உடைத்தாரோ அதேபோல் கில் விராட் கோலி ரெகார்டை உடைப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!
பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!
வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!