உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற தென்னாப்பிரிக்கா 213 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணி 49.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 101 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கிளாஸன் 47 ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!
பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!
வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!