உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து இன்று மோத உள்ளது. இந்த நிலையில் அதனைக் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களைப் பார்த்து கையசைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் இன்று பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி கடைசி இரண்டு உலகக் கோப்பை பதிப்புகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்து கோப்பையை தவறவிட்டது.
உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டங்களில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி பத்து புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் இன்று அரையிறுதியில் மோத இருக்கின்றன.
பலமிக்க இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகரான நடிகர் ரஜினிகாந்த் போட்டியைக் காணும் ஆவலில், நேற்று இரவு மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சூட்டிங் செல்லவில்லை மேட்ச் பார்க்க செல்கிறேன்’’ என தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!