உலகக் கோப்பை அரையிறுதி போட்டி: இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!


இந்தியா- நியூசிலாந்து

உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்துடன் இந்திய அணி இன்று மோதுகிறது.

இந்திய அணி

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி கடைசி இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பையைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டங்களில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி பத்து புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் இன்று அரையிறுதியில் மோத இருக்கின்றன.

நியூசிலாந்து அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 117 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 59 வெற்றிகளுடனும், இந்தியா 50 வெற்றிகளுடனும் உள்ளன. இரு அணிகளும் இடையில் இதுவரை ஒரே ஒரு போட்டி டை-யான நிலையில், ஏழு போட்டிகள் முடிவு ஏதுமின்றி முடிந்தது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 24 முறையும், சேசிங் செய்யும்போது 35 முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து 28 முறையும் சேஸிங்கிலும், 22 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுள்ளது

இந்திய அணி

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 5 முறையும், நியூசிலாந்துக்கு எதிரான இந்தியா 4 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அதனால் இன்றைய போட்டி விறுவிறுப்புடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

x