பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மார்னே மார்கல் ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் மார்னே மார்கல் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். 6 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அந்த அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும், இலங்கை அணியுடனான தோல்வியால் இழந்தது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான முக்கிய ஆட்டங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவியது. உலகத்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அந்த அணியால் எதிரணி வீரர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, ரன்களை வாரி வழங்கி பல்வேறு மோசமான சாதனைகளையும் படைத்தனர். இந்நிலையில், அந்த அணி உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
இந்நிலையில், அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மார்னே மார்கல் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை நியமிக்கவில்லை. பாகிஸ்தான் அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...