எனர்ஜியில் வீரர்கள்; அரையிறுதியில் கலக்குவோம்… ராகுல் டிராவிட் உற்சாகம்!


Rahul Dravid with Captain Rohit Sharma

இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. லீக் சுற்றில் ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது. வீரர்களின் தன்னப்பிக்கையும், திறமையும் இந்த வெற்றியால் கூடியுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அரையிறுதி போட்டிகள் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதே நேரம் நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rahul Dravid, Indian cricket team

இந்நிலையில், இந்த போட்டி குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய வீரர்களிடம் தற்போது உள்ள எனர்ஜியும், உற்சாகமும் நம்பிக்கை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், நடக்க உள்ளது அரையிறுதிப் போட்டி என்றாலும், அதனை மற்றும் ஒரு போட்டியாகவே பார்க்கிறோம். இதுவரை எப்படியான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளமோ அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றார் ராகுல் டிராவிட்.

இதுவரை இந்திய அணி அழுத்தமான சூழலை சிறப்பாகவே கையாண்டுள்ளது. அதனால், அரையிறுதிக்கான அழுத்தத்தையும் சரியாக கையாளும் என்றார். மேலும், இம்முறை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித், கில், கோலி ஆகியோர் சிறப்பனா தொடக்கத்தை அளிக்கின்றனர். அதேபோல், மிடில் ஆர்டரும் சிறப்பாக உள்ளது. அதனால், அணியின் திறமையின் மேல் மிகவும் நம்பிக்கை உள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

x