18 பதக்கங்கள்... பாரா பேட்மிண்டனில் இந்தியா அபாரம்!


பாரா பேட்மிண்டன்

ஜப்பானில் நடைபெற்ற 'பாரா' பேட்மிண்டனில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 'பாரா' பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பைனலில் (எஸ்.எல். 3) இந்தியாவின் பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார் மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பிரமோத் பகத் 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பைனலில் (எஸ்.எல்.3 - எஸ்.எல். 4) இந்தியாவின் நவீன் சிவகுமார், நேஹல் குப்தா ஜோடி 21-19, 18-21, 21-17 என சகநாட்டை சேர்ந்த மனோஜ் சர்க்கார், தீப் ரஞ்சன் பிசோயி ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.

பெண்கள் இரட்டையர் பைனலில் (எஸ்.எல். 3 - எஸ்.யு. 5) இந்தியாவின் துளசிமதி முருகேசன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி ஜோடி 21-16, 21-11 என இந்தோனேஷியாவின் லீனி, காலிமத்துஸ் சாதியா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 4 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றினர்.

இதையும் வாசிக்கலாமே... இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!

பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!

x