கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹொய்சாலா (34). ஹொய் சாலா கர்நாடகா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பந்துச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். கர்நாடகா பிரிமியர் லீக்கிலும் இவர் விளையாடி உள்ளார். குறிப்பாக கர்நாடகா பிரிமியர் லீகில் பெல்லாரி டஸ்கர்ஸ் மற்றும் ஷிவமோகா லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு நகரில் ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் கர்நாடக கிரிக்கெட் அணி சார்பில் ஹொய்சாலா விளையாடியிருந்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கர்நாடகா அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காக ஹொய்சாலா செல்லவிருந்தார். அப்போது திடீரென அவர் மைதானத்தில் மயங்கி விழுந்திருக்கிறார்.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்துள்ளனர். அந்த சிகிச்சை பலனளிக்காததால் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 34 வயதான ஹொய்சாலா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம், சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!
நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!
திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!
மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!